சமூக பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?

சமூக பாதுகாப்பு இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, சென்னை அவர்களின் தத்து வள ஆதார் மையத்தில் காலியாக  பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்புத் துறையில் வேலை வேண்டுமா?

 
சமூக பாதுகாப்பு இயக்குநர், சமூக பாதுகாப்புத் துறை, சென்னை அவர்களின் தத்து வள ஆதார் மையத்தில் காலியாக  பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: திட்ட மேலாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.  சமூகப்பணி, குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகவியல் போன்ற பிரிவுகளில்  பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 
பணி அனுபவம்: குறைந்தது 5 ஆண்டுகளுக்கு மிகாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: திட்ட உதவியாளர் - 01

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.  தரவு உள்ளீடு கொண்ட கணினி அடிப்படை அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதி, அனுபவம் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://www.tn.gov.in/jobopportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், மாநில தத்து வள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை -10.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 02.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/job/sara_recruitment_060821.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com