முகப்பு வேலைவாய்ப்பு
சூப்பர் வேலைவாய்ப்பு... டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
By | Published On : 29th August 2021 04:07 PM | Last Updated : 29th August 2021 04:07 PM | அ+அ அ- |

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) காலியாக உள்ள 19 இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆர்டிசி)
மொத்த காலியிடங்கள்: 19
பணி : Deputy General Manager
சம்பளம்: மாதம் ரூ.70,000 - ரூ.2,00,000
பணி : Engineering Associate
பணி : Executive
சம்பளம்: மாதம் ரூ.30,000 - ரூ.1,20,000
பணி : Assistant Manager
சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000 மாதம்
தகுதி : துணை பொது மேலாளர் பணிக்கு இளங்கலை, முதுநிலை டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பொறியியல் துறை சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது டிப்ளமோ அல்லது அதற்கு இணையான துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 7, 8 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை : https://ncrtc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்கள் அறிய https://ncrtc.in அல்லது https://ncrtc.in/hr-module/HR/uploads/VN442021.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2021