ரூ.40,000 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!
By | Published On : 24th December 2021 02:08 PM | Last Updated : 24th December 2021 02:08 PM | அ+அ அ- |

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள Business Manager மற்றும் Project Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Cipet)
பணி: Business Manager
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Fellow
சம்பளம்: மாதம் ரூ. 30,000
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.50,000 சம்பளத்தில் மீன்வளத்துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி : பொறியியல் துறையில் மெக்கானிக்கல், பிளாஸ்டிக், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிளாஸ்டிக் டெக்னாலஜி, பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Incharge, Administration, CIPET:SARP-LARPM, B-25, CNI Complex, Patia, Bhubaneswar - 751024
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.cipet.gov.in/ அல்லது https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php அல்லது https://www.cipet.gov.in/job-opportunities/downloads/17-12-2021-001/Advertisement.jpg என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?