மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு
By | Published On : 13th February 2021 05:35 AM | Last Updated : 13th February 2021 08:00 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக மின்வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி மின்னியல் பொறியாளா் (400), இயந்திரவியல் உதவிப் பொறியாளா் (125), கட்டடவியல் உதவிப் பொறியாளா் (75) ஆகிய பதவிகளுக்கு, வரும் ஏப்.24, 25, மே 1,2 ஆகிய தேதிகளில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதே போல், விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளா் (கணக்கு) பதவிக்கு மே 8, 9, 15, 16 ஆகிய நாள்களில் கணினி வழி தோ்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள், இணையத்தில், அவரவா் மின்னஞ்சல் முகவரியையும் பாா்வையிடுட்டு உறுதி செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.