மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வேயில் ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை: காலியிடங்கள் 561


ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.01/2021

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி 

காலியிடங்கள்: 561

துறைவாரியான காலியிடங்கள்: 
1. Diesel Mechanic - 35
2. Electrician - 160
3. Welder (Gas & Electronics) - 30
4. Machinist - 05
5. Fitter - 140
6. Turner - 05
7. Wireman - 15
8. Mason - 15
9. Carpenter - 15
10. Painter - 10
11. Gardener - 02
12. Florist & Landscaping - 02
13. Horticulture Assistant - 20
14. Information Communication Technology System Maintenance - 05
15. COPA - 05
16. Stenographer (Hindi) - 50
17. Stenographer (English) -07
18. Apprentice Food Production (General) - 08
19. Apprentice Food Production (Vegetarian) -02
20. Apprentice Food Production (Cooking) - 02
21. Hotel Clerk/ Receptionist - 05
22. Digital Photographer - 01
23. Asst Front Officer Manager - 01
24. Computer Networking Technician - 01
25. Creche Management Asst - 04
26. Secretarial Asst - 01
27. House Keeper - 04
28. Health Sanitary Inspector - 07
29. Dental Laboratory Technician - 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com