வேலைவேண்டுமா..? ராணுவத்தில் அதிகாரி வேலை - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 400 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி
யுபிஎஸ்சி


இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 400 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 03/2021-NDA-I

மொத்த காலியிடங்கள்:  400

தேர்வின் பெயர்: National Defence Academy and Naval Academy Examination(II)-2021

காலியிடங்கள்: 
1. Army - 208
2. Navy - 42
3. Airforce - 120

வயதுவரம்பு: 02.07.2002 - 01.07.2004-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defence Academy பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy, Airforce பணிக்கும் விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு அடிப்பசையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.04.2021

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2021

பயிற்சி ஆரம்பிக்கும் தேதி: செப்டம்பர் 2021

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notif-NDA-NA-I-2021-Engl-301220.pdf என்ற லிங்கில் செந்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com