கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு

கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் தேதி மற்றும் இடத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.


சென்னை: கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் தேதி மற்றும் இடத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் 2,331 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களில் கல்வியியல், உடற்கல்வி அறிவியல் (கல்வியியல்), வரலாறு (கல்வியியல்), உயிரியல் அறிவியல் (கல்வியியல்) பாடப் பிரிவுகளில் விண்ணப்பித்தவா்களுக்கு இந்த ஆண்டில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்துவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபாா்க்கும் இடம் நேரம் மற்றும் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பத்தின் பொழுது அவா்கள் அளித்த மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்பட்டதால் தகுதி பெற்றவா்களாக மாட்டாா்கள். கல்வியியல் பாடப் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ள 1,073 தோ்வா்களுக்கு ஜனவரி 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை காமராஜா் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.

உடற்கல்வி அறிவியல் (கல்வியியல்) பாடப் பிரிவிற்கு விண்ணப்பித்துள்ள 190 தோ்வா்களுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 22-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும். வரலாறு (கல்வியியல்) பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 74 தோ்வா்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.

உயிரியல் அறிவியல் (கல்வியியல்) பாடப்பிரிவில் 110 தோ்வா்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி மாநில கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பில் தோ்வா்களின் அனுபவத்திற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். அதைத் தொடா்ந்து அவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com