விண்ணப்பித்துவிட்டீர்களா... ? உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை

கர்நாடகம் மாநிலம், மைசூரில் செயல்பட்டு வரும் உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
விண்ணப்பித்துவிட்டீர்களா... ? உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை


கர்நாடகம் மாநிலம், மைசூரில் செயல்பட்டு வரும் உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். Rec.02/2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Secretariat Assistant(Gen) - 03
பணி: Junior Secretariat Assistant(F & A) - 03
பணி: Junior Secretariat Assistant(S & P) - 03
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer - 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் சுருக்கெழுத்தில் எழுதியதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, கணினியில் பணிபுரியும் திறன், தட்டச்சு திறன், சுருக்கெழுத்து திறன் போன்ற தேர்வில் பெறும் மத்திப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.cftri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 23.08.2021-க்குள் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.cftri.res.in/ApplicationForm/0_53378600_1624626685.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com