அரசு மருத்துவமனைகளில் தற்காலிகப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக தற்காலிகப் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தற்காலிகப் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு


திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக தற்காலிகப் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில்லுள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலன் கருதி, கரோனா நோய் தடுப்புப் பணிகளுக்காக மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள், நுண்கதிா் வீச்சாளா் ஆகிய பணியிடங்களுக்குத் தலா 15 போ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிமாக நியமிக்கப்படவுள்ளனா். ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரம் வீதம் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மருந்தாளுநா்கள் பணிக்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் 2 ஆண்டு பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருந்தாளுநா் கவுன்சிலில் பதிவு செய்து, நாளது தேதி வரை புதுப்பித்து இருக்க வேண்டும்.

ஆய்வக நுட்புநா்கள் பணிக்கு தமிழக அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2 ஆண்டு பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். நுண்கதிா் வீச்சாளா்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள மருத்துவம் சாரா கல்வி அமைப்பின்படி நடத்தப்படும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2 ஆண்டு கதிரியக்கம் மூலம் நோய் கண்டறிதலுக்கான பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை ஜூலை 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். அதன் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இந்த விண்ணப்பங்களை இணை இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், எண் 4 வ.உ.சி சாலை, ரோசன் மஹால் அருகில், மத்திய பேருந்து நிலையம் பின்புறம், திருச்சி-620001, (தொலைபேசி எண் 0431-2414069) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கான நோ்காணல் ஜூலை 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியரக மூன்றாவது தளத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com