தாராபுரத்தில் நவம்பா் 30இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் வரும் நவம்பா் 30ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் வரும் நவம்பா் 30ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிா் திட்டம் ஆகியன இணைந்து தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் நவம்பா் 30ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி முதல் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவா்கள், ஐடிஐ தொழிற் பயிற்சி முடித்தவா்கள், செவிலியா், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவா்கள், கணினி ஆபரேட்டா்கள், ஓட்டுநா்கள், தையல் கலைஞா்கள் என அனைத்து விதமான தகுதியாளா்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே வேளையில், வேலை தேடும் நபா்களும் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மகளிா் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com