வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... சென்னை கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி 

பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் கீழ் சென்னை நகர, நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலமாக தற்போது ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், டேட்டா எண்ரி ஆப்ரேட்டர், கணக்கு
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... சென்னை கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி 


பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் கீழ் சென்னை நகர, நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலமாக தற்போது ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், டேட்டா எண்ரி ஆப்ரேட்டர், கணக்கு உதவியாளர் என 50 பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து நாளைக்குள்(அக்.7) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

நிறுவனம்: GREATER CHENNAI CORPORATION,

மொத்த காலியிடங்கள்: 50 

பணி: Staff Nurse - 25
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: நர்சிங் பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்து பதிவு செய்திருக்க வேண்டும். 

பணி: Lab Technician - 10
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு எம்எல்டி கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். 

பணி: OT Assistant - 05
சம்பளம்: மாதம் ரூ.8,400
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Ophthalmic Assistant - 05
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Epidemiologist - 01
சம்பளம்: மாதம் ரூ.47,250
தகுதி: மருத்துவத்துறையில்  தொற்றுநோயியல் பிரிவில் சிறப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Account officer - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பி.காம் அல்லது சிஏ முடித்து கணினி மற்றும் டேலி குறித்து போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும் அல்லது அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

பணி: Account assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: பி.காம் முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு கணினி மற்றும் டேலியில் போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: DEO cum Accountant - 03
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். 

பணி: Data Entry Operator - 04
சம்பளம்: மாதம் ரூ.10,350
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் gcchealthhr@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2021 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: “Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Rippon Buildings, Chennai - 3”

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/gcc/Rect/NUHM_NOTICE_APPLICATION.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com