விளையாட்டு பயிற்சியாளர் ஆக விருப்பமா..? - அழைக்கிறது இந்திய விளையாட்டு ஆணையம்!

விளையாட்டு உதவி பயிற்சியாளர் பிரிவில் ஒப்பந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய விளையாட்டு ஆணையம்.
விளையாட்டு பயிற்சியாளர் ஆக விருப்பமா..? - அழைக்கிறது இந்திய விளையாட்டு ஆணையம்!


விளையாட்டு உதவி பயிற்சியாளர் பிரிவில் ஒப்பந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய விளையாட்டு ஆணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 220

பணி:  Assistant Coach

விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Archery - 13
2. Athletics - 20
3. Basketball - 06
4. Boxing - 13
5. Cycling - 13
6. Fencing - 13
7. Football - 10
8. Gymnastics - 06
9. Handball - 03
10. Hockey - 13
11. Judo - 13
12. Kabaddi - 05
13. Karate - 04
14. Kayaking & Canoeing - 06
15. Kho-Kho - 02
16. Rowing - 13
17. Sepak Takraw - 05
18. Shooting - 03
19. Softball - 01
20. Swimming - 07
21. Table Tennis - 07
22. Taekwondo - 06
23. Volleyball - 06
24. Weightlifting - 13
25. Wrestling - 13
26. Wushu - 06

சம்பளம்: மாதம் ரூ.41,420 -1,12,400

தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற இந்திய, வெளிநாட்டு பல்கலையில் டிப்ளமோ இன் கோச்சிங் அல்லது ஒலிம்பிக், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பு அல்லது துரோணாச்சாரியார் விருது பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

ஒப்பந்த காலம் : குறைந்தது 4 ஆண்டுகள். மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட விளையாட்டுத் துறையில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629970227_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1)%20(1).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com