மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,300
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அர்ச்சகர்(உள்கோயில்) - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600
தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான 1 ஆண்டு படிப்பினை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பரிசாரகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.13,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: மேளம் செட் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,300
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர் - 01
பணி: இரவு காவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600

பணி: திருவலகு - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: கால்நடை பராமரிப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

பணி: ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப் பாட சாலையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வந்து ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொழுத்து பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில், 315, தங்கசாலை தெரு, சென்னை - 3.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 20.09.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com