"தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு  கண்ணாடி இழை வலையமைப்பு "தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
"தமிழ்நாடு ஃபைபர்நெட்"  நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு


தமிழ்நாடு  கண்ணாடி இழை வலையமைப்பு "தமிழ்நாடு ஃபைபர்நெட்" நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 10 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Consultant  - 04
1. NOC Manager - 01
2. Routing Manager - 01
3. Infrastructure Manager - 01
4. GIS Manager - 01

பணி:  Associate Consultant  - 06 
1. NOC & Server - 01
2. OFC & Right of Way (Row) - 01
3. Network Security - 01
4. BSS and Helpdesk - 01
5. Operation Support System - 01
6. Electrical & Construction - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல்  பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி அனுபவம்: குறைந்தது 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செ்யது, பூர்த்தி செய்து செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது tanfinet@tn.gov.in மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Managing Director,
Tamil Nadu FibreNet Corporation Limited,
Door.No.807, 5th floor,
P.T.Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai, Chennai- 600 002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 21.4.2022 

மேலும் விவரங்கள் அறிய https://tanfinet.tn.gov.in அல்லது https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification%20Form%20and%20Application%20Format%20for%20Engagement%20of%20Consultants%20and%20Associate%20Consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com