சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!

பெங்களூருவில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்கலாம் வாங்க!



பெங்களூருவில் செயல்பட்டு வரும் சாப்ட்வேர் தொழிற்நுட்ப பூங்காவில் உள்ள காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். STPIB/1/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Member Technical Support Staff (MTSS) ES-V - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும். 

பணி: Member Technical Staff ES-IV - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
 
பணி:
Account Officer(A-V) - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400 
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant (A-IV) - 05
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400 
வயதுவரம்பு: 36க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிர்வாகவியல், நிதியியல், விஜிலன்ஸ் பிரிவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (A-III) - 01
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
வயதுவரம்பு: 34க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் நிர்வாகவியல், நிதியியல், விஜிலன்ஸ் பிரிவில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant (A-II) - 07
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi Tasking Staff - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிடிபி-பணியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி தட்டச்சு, போட்டோஸ், பேக்ஸ் மெஷின்ஸ், டீ, காஃபி மேக்கர் பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Software Technology Parks of India, Bengalore என்ற பெயருக்கு டி.டி.யாக அடுத்து அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:  https://bengaluru.stpi.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Administrative Officer, Software Technology Parks of India, No.76 & 77,
6th Floor, Cyber Park, Electronics City, Hosur Road, Bengaluru - 560 100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://bengaluru.stpi.in/sites/default/files/career-documents/EmpNotice2022_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கு விண்ணப்பிக்கலாம் |

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com