Enable Javscript for better performance
யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    யுபிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

    By   |   Published On : 29th January 2022 04:43 PM  |   Last Updated : 29th January 2022 04:43 PM  |  அ+அ அ-  |  



    மத்திய அரசில் காலியாக உள்ள முதுநிலை நிர்வாக அதிகாரி, உதவி வேலைவாய்ப்பு அலுவலர், துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர், அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் (ஆயுர்வேதம்) போன்ற 14 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

    விளம்பர எண்.02/2022

    பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

    பணி: Senior Administrative Officer 
    காலியிடங்கள்: 08
    தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் பணியாளர் மேலாண்மை அல்லது தொழில்துறை உறவுகள் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பது விரும்பத்தக்கது.  வேலை, அறிவியல், தொழில்துறை, தொழில்நுட்ப அமைப்புகள் துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
    வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

    பணி: Assistant Employment Officer
    காலியிடங்கள்: 01
    வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
    தகுதி: வணிகம்,சமூகப் பணி, சமூகவியல், பொருளாதாரம், புள்ளியியல், உளவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், சம்மந்தப்பட்ட பணி தொடர்பாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

    பணி: Sub-Regional Employment Officer/Officer
    காலியிடங்கள்:  01 
    வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
    தகுதி: சமூக நலம், சமூக பணி, பொருளாதாரம், புள்ளியியல், உளவியல், வணிகம் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி சம்மந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    பணி: Assistant Professor (Ayurveda)
    காலியிடங்கள்: 04 
    வயதுவரம்பு: 45-50க்குள் இருக்க வேண்டும். 
    தகுதி: ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

    விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in அல்லது http://www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022

    மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Advt-02-2022-engl-210122.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    இதற்கும் விண்ணப்பிக்கலாம் | கடற்படையில் அதிகாரி வேலை: பொறியியல், எம்பிஏ, எம்சிஏ முடித்தவர்களுக்கு வாய்ப்பு


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp