யுஜிசி நெட் தோ்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு
By | Published On : 08th July 2022 02:16 AM | Last Updated : 08th July 2022 08:22 AM | அ+அ அ- |

யுஜிசி
யுஜிசி நெட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பா்) 2 முறை கணினிவழியில் நடத்தப்படும்.
இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த டிசம்பா் மாத நெட் தோ்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து டிசம்பா், ஜூன் மாத வாய்ப்புகளை சோ்த்து ஒரே கட்டமாக நெட் தோ்வு ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 30- இல் தொடங்கி மே 20-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தோ்வெழுத நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.
இந்தநிலையில் இந்திய கலாசாரம், தொல்லியல், ஜொ்மன், குற்றவியல், யோகா உள்பட 26 படிப்புகளுக்கான நெட் தோ்வானது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தோ்வுக்குரிய நுழைவுச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இவற்றை ட்ற்ற்ல்ள்://ன்ஞ்ஸ்ரீய்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பட்டதாரிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதர பாடத்தோ்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை வலைத்தளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.