பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... இசிஐஎல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
By | Published On : 07th March 2022 11:53 AM | Last Updated : 07th March 2022 11:53 AM | அ+அ அ- |

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(இசிஐஎல்) நிறுவத்தில் காலியாக உள்ள Scientiffic Assistant, Junior Artisan பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 06/2022
பணி: Scientiffic Assistant-A
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,270 வழங்கப்படும்
தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வேதியியல் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Artisan(Electrical)
காலியிடங்கள்: 04
பணி: Junior Artisan (Chemical Plant Operator)
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,324
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ecil.co.in என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அசல், நகல்கள் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்: Project Office Cum Transit Accommodation, Bhabha Atomic Research Centre, 8th Main Road, Defence Layout, Near Regency Public School, Vidyaranyapura, Bengaluru - 560 097. Contat No. 080-23460110/431
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12.03.2022
டிரேடு தேர்வு நடைபெறும் நாள்: 13.03.2022
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை