யப்பா... தம்பி விஐபி... திருச்செங்கோட்டில் மார்ச்.19-இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்... மறக்காம போங்க
By | Published On : 12th March 2022 12:42 PM | Last Updated : 12th March 2022 12:42 PM | அ+அ அ- |

வேலைவாய்ப்பு முகாம் (கோப்புப்படம்)
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற் பயிற்சி, செவிலியா் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெறலாம்.
இலவசமாக நடைபெறும் இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனா்.
வேலை வேண்டி விண்ணப்பிபோா், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கரோனா தொற்று நடைமுறை விதிகளான முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும். இது தொடா்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகமை பயன்படுத்திக்கொண்டு பணி நியமன ஆணையை பெற்று பயன்பெறலாம்.