Enable Javscript for better performance
கலந்தாய்வில் மறைக்கப்படும் இடங்கள்: அரசு செவிலியர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கலந்தாய்வில் மறைக்கப்படும் இடங்கள்: அரசு செவிலியர்கள் சாலை மறியல்

    Published on : 20th April 2017 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காலியாக உள்ள இடங்கள், இடமாறுதல் கலந்தாய்வில் மறைக்கப்படுவதாகக் கூறி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
    இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், தென்மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் மறைக்கப்படுவதாகக் கூறி, கலந்தாய்வில் பங்கேற்க வந்த செவிலியர்களில் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
    இதுதொடர்பாக கலந்தாய்வில் பங்கேற்றோர் கூறியது:
    சுமார் ஆயிரம் காலியிடங்களில் கலந்தாய்வுக்கு செவிலியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கலந்தாய்வின்போது காலியிடங்கள் பட்டியலில் சுமார் 500 இடங்கள் மட்டுமே காட்டப்பட்டிருந்தது.
    தென்மாவட்டங்களில் உள்ள 99 சதவீத காலியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படவில்லை. கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அதிகாரிகள் அழைத்தனர்.
    5 பேர் பேச்சுவார்த்தை நடத்தச் சென்று, 3 மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
    விசாரித்ததில், அவர்களை காவல் துறையினர் உதவியுடன் அதிகாரிகள் மிரட்டி, பின்புற வாசல் வழியே வெளியேற்றிவிட்டது தெரியவந்தது என்றனர் அவர்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai