Enable Javscript for better performance
'துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான பணியை தேடல் குழுக்கள் நிறைவு செய்து, அதை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
    எனவே, விரைவில் மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
    பொறியியல் சேர்க்கைக்கு 2018-19 கல்வியாண்டு முதல் ஒரே பொது நுழைவுத் தேர்வு கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம். அதைப் பரிசீலனை செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.
    எனவே, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடத்தப்படும். அவ்வாறு விலக்கு அளிக்கவில்லையெனில், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai