Enable Javscript for better performance
ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்

    Published on : 21st April 2017 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2017-2018) அனைத்து வகை ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
    இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
    ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற அரசின் முடிவின்படி 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் அரசு நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறவுள்ளது.
    ஏப்ரல் 24 முதல்....ஆசிரியர்களின் பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 முதல் மே 5-ஆம் தேதி வரை பெறப்படும்.
    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பொருத்தவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.
    மே 19 முதல்...ஆசிரியர் மாறுதல் விண்ணப்பத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் உள்ளிட்டவை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்கும். பொது மாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் உள்ளிட்டவை வரும் மே 5-ஆம் தேதி முதல் தொடங்கும். மே 19-ஆம் தேதி முதல் மே 31 வரை மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.
    2017-2018ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணிநிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை:

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai