ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இன்று தொடக்கம்: 7.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இன்று தொடக்கம்: 7.40 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
இன்றும் நாளையும் தேர்வு: இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (சனிக்கிழமை-ஏப்.29), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு (ஞாயிற்றுக்கிழமை-ஏப்.30) என இரண்டு நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசாணை காரணமாக...: அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ரூ.33.5 கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்குக் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறும் முதல் தாளுக்கு உரியதாகும்.
சென்னை மாவட்டத்தில்...: சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ள தாள்-1 தேர்வை, 27 மையங்களில் 10,147 தேர்வர்களும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ள தாள்-2 தேர்வை 88 தேர்வு மையங்களில் 31,235 தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
அதிக கண்காணிப்புடன்...: தேர்வு நடைபெறுவதைக் கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியைக் கண்காணிப்பதிலும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com