ஏப்.6 இல் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

வேளாண் தகவல் மையத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி திடக்கழிவு மக்க வைக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேளாண் தகவல் மையத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி திடக்கழிவு மக்க வைக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்த விவரம்:
நகர்ப்புறங்களில் கிடைக்கப்பெறும் திடக்கழிவுகளை மக்கவைத்து மாடித்தோட்டம் வளர்ப்பு உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் பயன்பெறும் வகையில், திடக்கழிவுகளை மக்கவைக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி வேளாண் தகவல் மையத்தில் அளிக்கப்படுகிறது.
நீர் தர மதிப்பீடு பயிற்சி: அதுபோல் வீடுகளில் குடிநீர், இதர பயன்பாடுகளுக்கு, நீரின் தரத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம், உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படுகிறது.
திடக்கழிவு மக்கவைத்தல், நீரின் தரம் அறிதல் ஆகிய பயிற்சிகளை ஏப்ரல் 6 -ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் இளைஞர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். ரூ.600 பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும்.
பயிற்சி நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044 2626 3484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என வேளாண் தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com