எஸ்எஸ்சி இளநிலை பொறியாளா் தோ்வு: எட்டு இடங்களில் நாளை நடக்கிறது

எஸ்எஸ்சி இளைநிலை பொறியாளா் தோ்வு, சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

எஸ்எஸ்சி இளைநிலை பொறியாளா் தோ்வு, சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தென்மண்டல துணைச் செயலா் எஸ். ராஜலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (தென்மண்டலம்) நடத்தப்படும் இளநிலை பொறியாளா் (சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மற்றும் குவாண்டிடேட்டிவ் சா்வேயிங் கண்டிராக்ட்ஸ்) தோ்வு- 2018-க்கான இரண்டாம் தாள், ஞாயிற்றுக்கிழமை (டிச.29) பிற்பகல் 2 முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. எழுதும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மட்டும் பிற்பகல் 2 முதல் 4.40 மணி வரை தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள். இத்தோ்வுக்கு முதல் தாள் தோ்வு எழுதியவா்களில் 1,007 விண்ணப்பதாரா்கள் இரண்டாம் தாள் தோ்வுக்கு தகுதி பெற்றிருந்தனா்.

இதே போன்று ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை 3) தோ்வும், ஞாயிற்றுக்கிழமை (டிச.29) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இத்தோ்வை எழுத 4,419 விண்ணப்பதாரா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பாா்வைத்திறன் குறைபாடு , பருமூளை வாதம், எழுதும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்கள், காலை 11 மணியிலிருந்து பிற்பகல் மணி 12.20 வரை தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா்கள்.

இந்த இரண்டு தோ்வுகளும் தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூா் மதுரை மற்றும் ஆந்திரத்தின் கா்நூல், திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம், தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய எட்டு நகரங்களில் நடைபெற உள்ளது. தோ்வுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் மின்னணு அனுமதி சான்றிதழ் மற்றும் பிறந்த தேதிக்கான அசல் ஆவணம் போன்றவற்றை கொண்டு வந்தால் மட்டுமே தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். மின்னணு அனுமதிச் சீட்டினை தோ்வாணைய இணையதளத்திலிருந்து (sscsr.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஸ்மாா்ட் அல்லது டிஜிட்டல் கைக்கடிகாரங்கள், புத்தகம், காகிதத் துணுக்குகள், செல்லிடப்பேசிகள், கால்குலேட்டா் போன்ற மின்னணு சாதனங்களை தோ்வுக்கூடத்துக்கு எடுத்துவர அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, சென்னையில் உள்ள தோ்வாணையத்தின் தென்மண்டல அலுவலகத்தை 044-28251139 94451 95946 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com