முகப்பு தேசியச் செய்திகள்
மத்திய அரசு ஆந்திராவுக்கு ரூ.24 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல்
By ENS | Published On : 28th February 2019 08:10 PM | Last Updated : 28th February 2019 08:10 PM | அ+அ அ- |

மத்திய அரசு ஆந்திராவுக்கு ரூ.24 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக ஆந்திர பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆந்திர மாநில பாஜக தலைவர் கண்ணா லட்சுமிநாராயணய்யா கூறுகையில்,
உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஆந்திர அரசுக்கு ரு.24 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக நகரப்பகுதிகளில் 10 லட்சம் வீடுகளும், கிராமப்புறங்களில் 10 லட்சம் வீடுகளும் மத்திய அரசால் கட்டித்தரப்பட உள்ளது. இது வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத அளவு மிகப்பெரிய தொகையாகும்.
மத்திய அரசின் நிதியில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது சொந்த செலவுகளுக்காக மட்டும் ரூ.600 கோடியை செலவு செய்துகொண்டுள்ளார். மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கு மாநில தெலுங்கு தேசம் அரசு ஒரு நன்றியை கூட தெரிவிக்கவில்லை என்றார்.