
அதிமுக தலைமை அலுவலகம் சென்ற முன்னாள் முதல்வர் ரங்கசாமி அக்கட்சியினருடன் கலந்துரையாடினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி, புதுவையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றார். மேலும் அங்கிருந்த அதிமுக-வினருடன் கலந்துரையாடினார்.
முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால் 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
நமது கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும். இந்த தேர்தல் புதுச்சேரியின் விதியை மாற்றக்கூடியது. அதேபோன்று சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி அதிக வாக்குகளை பெறும். அதிக வாக்கு வித்தியாசத்தில் நமது வெற்றி உறுதி. ஏனென்றால் நமது கூட்டணியில் பாமக மற்றும் பாஜக உள்ளது என்று அங்கிருந்த அதிமுக-வினரிடம் பேசினார்.