தகாத உறவு: இருவரின் மூக்கை அறுத்த கிராமத்தினர்
By DIN | Published On : 29th January 2020 09:52 AM | Last Updated : 29th January 2020 09:52 AM | அ+அ அ- |

தகாத உறவில் ஈடுபட்ட இருவரின் மூக்கை கிராம மக்கள் அறுத்தெடுத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைஸாபாத் பகுதியில் அமைந்துள்ள கண்ட் பிப்ரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுடைய மாமனார் மற்றும் கிராம மக்கள், இருவரையும் பிடித்து அடித்து, மூக்கை அறுத்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்த போலிஸார், மாமனார் மற்றும் கிராம மக்கள் சிலரை கைது செய்தனர். மேலும் அவ்விருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது அங்கு போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.