மலையம்பாக்கம் கோதண்டராமர் ஆலயம்

காஞ்சி மாவட்டம் மலையம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 120 வருடப் பழமையான ஆலயம் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று உழவாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை அடுத்து பூந்தமல்லியில் உள்ள அகரம் நசரத்பேட்டைக்கு தெற்கில் அமைந்துள்ளது இத்தலம். இதில் அகநாழிகையில் இறைவன் தமையன் இலட்சுமணன், மனைவி சீதையுடன் கற்சிலையாக அழகுடன் வடிக்கப்பட்டுள்ளார். எதிரே பெரிய திருவடி கருடாழ்வார் உள்ளார். லேட்டரைட் வகைக் கற்களால் கட்டப்பட்ட அழகிய சதுரவடிவ குளமும், ஆலயத்திற்கு வடக்கில் ஏற்றம் இறைக்க வசதியான கட்டமைப்புடன் காணப்படுகிறது. படங்கள் மற்றும் செய்திகள் உதவி: சென்னை சேவாஸ் பாண்டியன்
மலையம்பாக்கம் கோதண்டராமர் ஆலயம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com