அருள்மிகு அட்சயலிங்க சுவாமி திருக்கோயில்

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய சன்னதி. இரண்டு பிரகாரங்கள். சமயகுரவர்களால் பாடப்பெற்றதும், இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் முருகன், பத்ரகாளி, நடராஜர், சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அகத்தியர், விஸ்வநாதர், கைலாசநாதர், பிரகதீஸ்வரரர், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் உள்ளன. வேளூர் என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் "கீழ்வேளூர்' ஆனது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை வழிபட்ட பிரம்மாவுக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் கிடைத்தது. நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் முழ்கி தன் சாபம் நீங்கப் பெற்றான். இத்திருக்கோவில் செல்ல நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவாரூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. 
அருள்மிகு அட்சயலிங்க சுவாமி திருக்கோயில்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com