மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கான பட்டாபிஷேக பூஜைகள் தொடங்கின. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இரவு 7.50 மணி முதல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடந்தேறியது. படங்கள் உதவி: குண அமுதன், புகைப்படக் கலைஞர், மதுரை. தொடர்புக்கு: 9843221319  
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com