செப்பறை அழகியகூத்தர் திருகோவில்

இத்திருத்தலம் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து கிழக்கே 4 கீலோ மீட்டர் தொலைவில் உள்ள இராஜவல்லிபுரம் கிராமத்தில் அமையபெற்றது. ஐம்பெரும் சபைகளில் ஒன்றான 'தாமிர சபை' என்று போற்றப்படும் இத்தலத்தில் உலகில் முதன் முதலாக செய்யப்பட்ட நடராஜர் சிலை இங்கு காணப்படும் அழகியகூத்தர் திருமேனி ஆகும். இச்செப்றைபதியை மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படை மன்னன் ஆகியோர்க்கு நடனக்காட்சி கொடுத்த சிறப்புடையது. இங்கு தாமிரத்தால் ஆன இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இறைவன் நடனம் புரியும் சபையானது, தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் சந்தன சபாபதி என்று அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன் ஆடும் நடனமானது ‘திருத்தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது. படங்கள் உதவி: https://alagiyakoother.wordpress.com
செப்பறை அழகியகூத்தர் திருகோவில்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com