உழவாரப்பணி

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 12 நாள் தெப்பத்திருவிழா வரும் 21 ம்தேதி வண்டியூர் மாரியம்மன் கோவில் மற்றும் முக்தீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள 22 ஏக்கர் தெப்பத்தில் நடைபெறுகிறது. மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்த நட்சத்திரமான பூசம் தினத்தன்று. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. அன்று,  சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவிலில் இருந்து முக்தீஸ்வரர் கோவில் வந்து, அங்கு பூஜை முடிந்து பின் மைய மண்டபத்தில் எழுந்தருளி, பிறகு அலங்கரிக்கப்பட்ட மிதவையில் 3 முறை காலை‌ மாலை இரவில் சுற்றி வந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தபின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் இரவில் கோவிலுக்குத் திரும்புவார்கள்.  மைய மண்டபத்திற்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வருகையை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி  அன்று  மதுரை அன்னை மீனாட்சி உழவாரப்பணி குழுவின் தலைவர் முருகானந்தம் சுவாமிகள் (ராமகிருஷ்ணா மடம்‌) மற்றும் ஓம் நமசிவாய உழவாரப்பணி குழு தலைவர் வெள்ளியம்பலம் இணைந்து  சண்முகம் சாமி தலைமையில் மைய மண்டபத்தை சுத்தம் செய்யும்  உழவாரப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. உழவாரப்பணி தொடர்புக்கு : முருகதாஸ் 7373730396.
 உழவாரப்பணி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com