சைமா அவார்ட்ஸ் 2017

வருடந்தோறும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா இந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை `ரெமோ' படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயன் பெற்றார். சிறந்த நடிகையாக நயன்தாரா `இருமுகன்' படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார். சிறந்த எண்டர்டெய்னர் விருதை விஜய் `தெறி' படத்திற்காக பெற்றார். சிறந்த படமாக சுதா கோங்கரா இயக்கத்தில் மாதவன் ரித்திகா சிங் நடித்த `இறுதிச்சுற்று' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பாடலாசிரியராக மதன் கார்க்கி - முன்னாள் காதலி (மிருதன்) தேர்வு செய்யப்பட்டது. சிறந்த பெண் பாடகராக சித்ரா - கொஞ்சி பேசிட வேண்டாம் (சேதுபதி) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த ஆண் பாடகராக அனிருத் - செஞ்சிட்டாளே (ரெமோ) படத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டது., சிறந்த காமெடி நடிகராக யோகி பாபு (ஆண்டவன் கட்டளை) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது., சிறந்த வில்லன் கதாபாத்திரமாக த்ரிஷா (கொடி) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது., சிறந்த பெண்  துணை நடிகராக ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த ஆண் துணை நடிகராக பிரகாஷ் ராஜ் (மனிதன்) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி அவார்ட் - பேபி நைனிகா (தெறி) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த இயக்குனராக அட்லீ (தெறி) படத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. சிறந்த திரைப்படமாக இறுதிச்சுற்று தேர்வு செய்யப்பட்டது.
சைமா அவார்ட்ஸ் 2017
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com