விக்ரம்பிரபு தயாரித்து, நடித்திருக்கும் 'நெருப்புடா' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ஆடியோவை ரஜினி வெளியிட்டார். இதில் சத்யராஜ், விஷால், தனுஷ், விவேக், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிரபு உள்பட திரையுலகைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.