65வது தேசிய திரைப்பட விருதுகள் தில்லியில் அறிவிக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கி வெளியான ‘காற்று வெளியிடை’ தமிழ்ப் படத்தில் இடம்பெற்ற ‘வான் வருவான்’ பாடலுக்காக ஷாஷா திருப்பதிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.