திருவிடந்தையில் தொடங்கியது ராணுவ தளவாடக் கண்காட்சி

திருவிடந்தையில் தொடங்கியது ராணுவ தளவாடக் கண்காட்சி

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாடக் கண்காட்சி தொடங்கி வைத்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். கண்காட்சியில், 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. தொடக்க விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய விமானப் படை, கப்பல் படை, ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று ஏப்ரல் 12ல் பார்வையிட உள்ளதை முன்னிட்டு கண்காட்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com