சென்னையில் பலத்தக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக முகப்பேர், நுங்கம்பாக்கம், போரூர், ராமபுரம், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. மழையால், வெப்பம் தணிந்து சென்னை மாநகரம் குளிர்ச்சியானது.