தில்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ஆம் தேதியன்று ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ராணுவ தினத்தையொட்டி தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர் ஜவானில், நாட்டுக்காக இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, ராணுவத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.