மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதிக்கு இன்று 96வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. ஜெ.அன்பழகன், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.