’மெட்ரோ’ புகழ் இயக்குநர், தயாரிப்பாளர் ஆனந்த கிருஷ்ணன் - ஸ்ரீலேகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரை பி.டி.ஆர். ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சேகர், தயாரிப்பாளர், இயக்குநர் குகநாதன், நடிகர்கள் அசோக் செல்வன், கிரிஷ், இசையமைப்பாளர் ஜோகன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.