நவராத்திரி விழாவை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மாடவீதிகளில், கொலு பொம்மை விற்பனை களைகட்டி வருகிறது. இதில், ராமாயண கதை பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், அஷ்டலட்சுமி, தசாவதார தொகுப்பு, ராமர், ராவணன் மற்றும் பல்வேறு வகையான கடவுள் பொம்மைகள் கண்களை ஈர்க்கும் விதத்தில், வைக்கப்பட்டு உள்ளன.