ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது நாள்..

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம், இந்திய அணி வெறும் 97 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நாளைய ஆட்டத்தில் இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஓரளவு ரன் குவித்தால், பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.இந்த ஆட்டத்தின் இன்றைய ஆட்டத்தில் மட்டும் 16 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளும், இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் 6 விக்கெட்டுகளும் இன்று விழுந்தன. 
ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது நாள்..
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com