தொழிலாளர்களுக்கு காந்திஜி புத்திமதி

முன்னேறிச் செல்ல உங்களுக்கு பலமில்லாதிருக்கும் பட்சத்தில், சமயம் வரும் வரை காத்திருப்பதில் அசெளகரியம் ஒன்றுமில்லை.
தொழிலாளர்களுக்கு காந்திஜி புத்திமதி

முன்னேறிச் செல்ல உங்களுக்கு பலமில்லாதிருக்கும் பட்சத்தில், சமயம் வரும் வரை காத்திருப்பதில் அசெளகரியம் ஒன்றுமில்லை. ஆனால் வேலைநிறுத்தப் பாதையை மேற்கொண்டு விட்டால், நியாயத்தைப் பெறும் வரை புறம் காட்டுவதென்ற பேச்சே இருக்கக்கூடாது என்று மகாத்மா காந்தி, நெசவுத் தொழிலாளர் சங்க காரியதரிசி ஸ்ரீ. குல்ஸாரிலால் நந்தா மூலம், ஆமதாபாத் மில் தொழிலாளர்களுக்கு விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடுகிறார்.
காந்திஜி மேலும் கூறுவதாவது:
தொழில் நிலைமை பூராவையும் குல்ஸாரிலால்ஜி என்னிடம் தெரிவித்திருக்கிறார். நீங்கள் கேட்பவை ரொம்பவும் நியாயமாகும். மத்தியஸ்தமோ அல்லது நியாயத்தைப் பெற வேறு எந்த சாதனமோ நமக்குக் கிடைக்காதிருக்கும் போது வேலைநிறுத்தம் ஒன்றே நமது பரிகார நடவடிக்கையாகும். வேலைநிறுத்த ஆயுதத்தை உபயோகிக்கு முன், அதனால் ஏற்படும் அனைத்தையும் உணருங்கள்.
வேலைநிறுத்தம் வெற்றிகரமாய் அமைய என்னென்ன தேவை என்பதை பல வருஷங்களுக்கு முன் நான் கூறியிருக்கிறேன். வேலையில்லாத காலத்தை பெருந்தன்மையுடன் சமாளிக்க உங்களில் ஒவ்வொருவரும் வேறு ஒரு தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் யாதொரு சிரமமுமின்றி கிடைக்கக்கூடிய நூற்றல், நெசவு வேலை இருக்கிறது அல்லது வேறு வேலையை நீங்கள் கண்டுபிடித்தால் அதிலும் இருந்து கொள்ளலாம். உங்களில் ஜாஸ்தி சம்பாதிக்கக் கூடியவர்கள், தவிக்கும் உங்கள் சகபாடி தொழிலாளர்களுக்கு உதவி புரிய வேண்டும்.அது அவர்கள் கடமையாகும். இந்த வழியில்தான் நீங்கள் எதிர்கால சந்தேகங்களிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம். இந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டால் கூட இந்த புத்திமதியைப் பின்பற்ற ஆரம்பியுங்கள். உங்களுக்கு எனது ஆசீர்வாதம்.

தினமணி (12-02-1940)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com