சமஸ்தானங்களில் நடக்கும் அநீதிகளை மந்திரிகள் கவனிக்க வேண்டும்

"சமஸ்தானங்களும் ஜனங்களும்' என்ற தலைப்பின் கீழ், மகாத்மா காந்தி பின் வருமாறு எழுதியிருக்கிறார்
சமஸ்தானங்களில் நடக்கும் அநீதிகளை மந்திரிகள் கவனிக்க வேண்டும்

"சமஸ்தானங்களும் ஜனங்களும்' என்ற தலைப்பின் கீழ், மகாத்மா காந்தி பின் வருமாறு எழுதியிருக்கிறார்:
 "தங்கள் மாகாணங்களில் உள்ள, சமஸ்தானப் பிரஜைகள் விஷயத்தில் (பிரிட்டீஷ் இந்திய மாகாணங்களின்) மந்திரிகளுக்கும் தர்ம நியாயப்படி பொறுப்பு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் படி, மந்திரிகளுக்கு அவர்கள் மீது ஒன்றும் அதிகாரம் கிடையாது. கவர்னர், வைஸ்ராயின் ஏஜென்ட்; வைஸ்ராய், மன்னர் சர்க்காரின் பிரதிநிதி; ஆனால், சமஸ்தானங்களில் நடப்பவைப் பற்றி மந்திரிகளுக்கு நிச்சயம் பொறுப்பிருக்கிறது.
 சமஸ்தானங்களும், பிரஜைகளும் திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரையில் மந்திரிகளுக்கு கவலையில்லை. ஆனால், சமஸ்தானங்களில் கடுமையான தொத்து வியாதி பரவுவதாக வைத்துக்கொள்வோம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், அந்த மாகாணத்திற்கும் அது பரவக்கூடும். தென்கனாவில் இப்போதிருக்கும் நிலைமைக்கு மந்திரிகளுக்கு ஒன்றும் பொறுப்பில்லையா?
 கஷ்டப்படுத்தப்படும் மக்கள் பிரிட்டீஷ் ஒரிஸ்ஸாவில் தஞ்சம் புகுவதாக அறிகிறேன். மந்திரிகள் அவர்களுக்கு இடமில்லையென்று சொல்ல முடியுமா? அவர்களுக்கேற்படும் கஷ்டங்கள் மாகாணத்தையும் தான் பாதிக்கும். உள்நாட்டு சமாதானத்தை முன்னிட்டு மந்திரிகளுக்கு இதில் ஒரு பொறுப்பு இருக்கிறதென்றே நான் வற்புறுத்திச் சொல்லுகிறேன்.
 தென்கனாவில் ஜனங்கள் புழுதியைப்போல் மிதித்துத் தள்ளப் படுவதாகச் செய்திகள் வருகின்றன. பிரிட்டீஷ் சர்க்காரின் யதேச்சாதிகார சிருஷ்டிகளான சமஸ்தானங்களில் ஜனங்கள் இப்படிக் கஷ்டப்படுவதை மந்திரிகள் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
 தங்கள் எல்லைக்குட்பட்ட நீதியற்ற ஆக்ஷியை மாகாண மந்திரிகள் கவனித்து தானாக வேண்டுமென்று நான் கருதுகிறேன். இது சம்பந்தமாக என்ன செய்ய வேண்டுமென்று பிரிட்டீஷ் சர்க்காருக்கு ஆலோசனை கூறியாக வேண்டுமென்றும் கருதுகிறேன்.''

தினமணி (03-12-1938)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com