நேச நாடுகளுக்கு ஆதரவு ஏன்?

இன்று பத்திரிகை நிருபர்களிடம் மகாத்மா காந்தி பின்வருமாறு கூறினார்:
நேச நாடுகளுக்கு ஆதரவு ஏன்?

இன்று பத்திரிகை நிருபர்களிடம் மகாத்மா காந்தி பின்வருமாறு கூறினார்:
நான் ஒத்துழையாமை அனுஷ்டிப்பது தீமை புரியும் நபர்களுடனல்ல. தீமையுடனேயே எனக்கு நான் ஒத்துழையாமையை அனுஷ்டிக்கும் போதும், என் நோக்கம் தீமை புரிபவனை அந்த தீமையை கைவிடும்படி நல்வழிக்குத் திருப்பி, பிறகு அவனுக்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென்பதே என் நோக்கமாக இருக்கும். 
மிதவாதிகள், பணக்காரர் என வர்ணிக்கப்படுவோருடன் நான் உறவு கொள்ளும் போது, நான் எந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேனோ அதில் அவர்களுடைய உதவியை பெறுவதற்கே அவர்களை அணுகுகிறேன். அப்போதும் நான் அவர்களைப் பற்றி எவ்விதத்திலும் முடிவு கட்டிக்கொண்டு விடாமல்,அணுகுகிறேன். என் கருத்தில் தவறு இருப்பதாக உணரும்போது அந்த தவறை திருத்திக்கொள்வதும் உண்டு. இவர்களுடன் உறவு கொண்டதால் என் லக்ஷியம் சிதைவுற்றதாக நான் ஒருபோதும் அனுபவத்தில் கண்டதில்லை. நான் வெளியிட்டுள்ள அபிப்ராயத்தின் மூலம் நேச நாடுகளுக்கு நான் தார்மிக ஆதரவை அளித்துவிட்டதாக சிலர் குறை கூறுகிறார்கள்.
நான் அளிக்க முன்வரும் ஒத்துழைப்பு ஒரு நிபந்தனைக்கு உட்பட்டதே. அதாவது பிரிட்டிஷ் சர்க்கார் (யுத்த காலத்தில் மட்டும் சில வரையறைக்குட்பட்ட) இந்திய சுதந்திரத்தை ஒப்புக்கொண்டால்தான் நான் சொல்லியுள்ளது அனுஷ்டானத்துக்கு வரும். ஆகையால் ஆகஸ்ட் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கொள்கைகளுக்கும் கெல்டர் பேட்டியில் நான் கூறியுள்ளதற்கும் யாதொரு முரண்பாடும் இல்லை.
என்னைக் குறை கூறுவோர் பிரிட்டிஷ் சர்க்கார் வாயை திறந்து தமது கருத்தை வெளியிடும்வரையில் காத்திருக்க வேண்டும் என்று நான் யோசனை கூறுகிறேன். நான் வெளியிட்ட கருத்துக்கள் சர்க்காரின் கவனத்துக்காக வெளியிடப்பட்டவை. ஸ்ரீ. கெல்டர் திடீரென்று அதை பிரசுரித்துவிட்டார்.

தினமணி (15-07-1944)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com