சுடச்சுட

  
  gandhi2

  இந்தியா முழுவதன் சுதந்திரத்தையே லக்ஷியமாகக் கருதி காந்திஜியும் ஸ்ரீ. ஜின்னாவும் சம்பாஷணை நடத்துவதாக இன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி அறிவித்தார்.
  தற்போது நடக்கும் காந்திஜி-ஜின்னா சம்பாஷணை போல அரசியல் சமரசப் பேச்சு எதுவும் இவ்வளவு பரம ரகசியமாக இருக்கவே இல்லை. இன்று 103 நிமிஷ சம்பாஷணை முடிவில் இரு தலைவர்களும் வெளியே வந்து படம் பிடிக்க போட்டோகாரர்கள் முன்பு நின்றபோது அவர்களது முகக்குறிகள் மூலம் பத்திரிகை நிருபர்கள் இன்றைய சம்பாஷணையின் போக்கை ஒருவாறு யூகிக்க முயன்றனர். 
  பிறகு மகாத்மா காந்தி பிரார்த்தனையின்போது பேசுகையில் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிவித்தார். தாமும் ஸ்ரீ. ஜின்னாவும் தங்கள் சம்பாஷணையின்போது தேசத்தின் சுதந்திர லக்ஷியத்தையே பிரதானமாகக் கருதுவதாக பொது ஜனங்களுக்கு உறுதிமொழி கூறினார்.
  ஆனால் இச் சம்பாஷணை பற்றி ஹேஸ்யங்கள் கூடாதென்று மகாத்மா காந்தி நிருபர்களை எச்சரித்தார்.
  இன்றிரவு பிரார்த்தனை கூட்டத்தில் மகாத்மா காந்தி இந்துஸ்தானியில் பேசியதாவது:
  நாங்கள் எங்களது பொறுப்பை பூரணமாக உணருகிறோம். ஒரு சமரச ஏற்பாடு வகுக்க தீவிரமாக முயலுகிறோம். ஆனால் இறுதியாக முடிவு என்ன ஆகுமென்பது கடவுளின் சித்தத்தைப் பொறுத்திருக்கிறதென்பதையும் நாங்கள் உணருகிறோம். 
  இன்று ஸ்ரீ. ஜின்னா என்னிடம் கூறிய ஒரு விஷயத்தை வெளியிட விரும்புகிறேன். நாம் இருவரும் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் பிரிந்தால் தமக்கு அறிவுசூன்யம் இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் கூற போனால், கோடிக்கணக்கான நமது தேச மக்களின் நம்பிக்கையும் பாழாகிவிடும். இன்று உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் திருஷ்டியும் நம்மீது இருக்கிறது என்று ஸ்ரீ. ஜின்னா கூறினார்.

  தினமணி (13-09-1944)
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai