சுடச்சுட

  
  gandhi2

  காந்திஜி இன்னமும் ஓய்வெடுத்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஜனவரி 10-ந் தேதி வரை மெளன விரதம் அனுஷ்டிப்பார். இருமல் இருப்பதால் அவர் பேசும்போது மிகுந்த சிரமமும் களைப்பும் ஏற்படுகிறது.
   சேவாகிராமம் சாந்தி பீடமாகவே இருந்து வருகிறது.
   காந்திஜி மீண்டும் தமிழ் பயின்று வருகிறார். போப் ஐயர் தமிழ் இலக்கண நூல் அவர் கையில் காணப்படுகிறது. தமிழ் தெரிந்த ஒருவர் உதவி கொண்டு பாரதியாரின் பாப்பா பாட்டு பயின்று வருகிறார். முதல் நாள் ஒருவர் உதவியுமில்லாமல் பாரதியார் பாட்டின் சில வரிகளை தாமாகவே படித்தார். தமிழ் உச்சரிப்பை கவனத்துடன் மேற்கொள்கிறார்.
   தமிழ் பயில்வது மட்டுமல்ல; பஞ்சாபி ஒருவர் உதவியுடன் இக்பாலின் எழுத்துக்களையும் படித்து வருகிறார். இவ்வளவு வேலை செய்து வருபவருக்கு உண்மையில் எப்படி ஓய்வு எங்கிருந்து கிடைக்கிறது என்பது ஆச்சரியமாகத்தானிருக்கிறது. அவரைப் பார்த்தால் தூங்கும் எரிமலை தான் நினைவிற்கு வருகிறது.
   சேவா கிராமத்தில் இரண்டு பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. தேசிய கல்வி மகாநாடு ஜனவரி 11-ந் தேதி காலை 8 மணிக்கு மகாத்மாவினால் தொடங்கி வைக்கப்படும். தேசியக் கல்வித் திட்டம் வகுப்பது பற்றி இம் மகாநாடு ஆலோசிக்கும்.
   கிராம ஊழியர் பயிற்சி முகாம் ஸ்ரீ. கனு காந்தி மேற்பார்வையில் நடக்கும். காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஊழியர்களுக்கு வேலையிருக்கும். இதற்கு 700 தொண்டர்களுக்கு மேல் மனு செய்து கொண்டனர். இவ்வாரத்தில் வந்துள்ள மற்றொரு செய்தி அனைவருக்கும் பெருங்கவலை தந்துள்ளது. ஜபல்பூரில் ஸ்ரீ. குமரப்பா நோய்வாய்ப்பட்டிருப்பதாக கிடைத்துள்ள செய்தி காந்திஜிக்கு மிகுந்த கவலை தந்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai