மரண தண்டனைக்கு காந்திஜி கண்டனம்

சிமூர், அஷ்டி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கு
மரண தண்டனைக்கு காந்திஜி கண்டனம்

சிமூர், அஷ்டி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கு நாகபுரி மத்திய சிறை சூப்பிரண்ட் எழுதியிருக்கும் கடிதத்தில், ஏப்ரல் 4‰}க்கு முன் கைதிகளை கடைசி தடவையாக பார்த்துவிட்டு கூறியிருக்கிறார்.
 சிமூர், அஷ்டி வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 7 கைதிகள் விஷயத்தில் கருணை காட்ட வேண்டுமென்று கேட்டு சமீபத்தில் செய்துகொள்ளப்பட்ட மனுவை மன்னர் நிராகரித்துவிட்டார் என்று தெரிகிறது.
 இந்தக் கைதிகளின் கருணை மனுக்களை மன்னர் நிராகரிப்பது பற்றி மகாத்மா காந்தி பின்வரும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்:
 "அஷ்டி, சிமூர் வழக்கு கைதிகளின் மனு நிராகரிக்கப்பட்டதென்ற செய்தி நிஜமானால் அது கலக்கத்தையே உண்டு பண்ணுவதாகும். எந்த வழக்கிலும் தூக்கு தண்டனை எனக்கு உடன்பாடல்ல. இவ்வித வழக்குகள் பெரும்பாலானவற்றில் 1942„ ஆகஸ்ட் … 8‰ அன்றும், பிறகும் ஜனங்கள் செய்தனவெல்லாம் ஆத்திரமூட்டப்பட்டதன் பேரிலேயே இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமானால் அது வேண்டுமென்றே ஈவிரக்கமில்லாமல் செய்யப்பட்ட கொலைக்குச் சமம். சட்டம் என்ற பெயரால் இது சடங்கு முறையில் செய்யப்படுவதால் அதற்கும் இழிவாகக் கூட மதிக்கப்படலாம்.
 தேசத்தில் ஏற்கனவே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மேலும் அதிகரிக்கவே போகிறது. அக் கைதிகளை தூக்கிலிடுவதை நிறுத்திவிட வேண்டுமென்று நான் பெரிதும் இஷ்டப்படுகிறேன். இந்த தண்டனையையும், இம்மாதிரியே உத்தேசிக்கப்பட்டிருக்கும் இதர தண்டனைகளையும் எதிர்த்து இந்தியாவில் ஐக்கிய குரல்கள் எழுப்பப்படுமானால் அத் தண்டனைகள் நிறுத்தப்படக் கூடும்.''

 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com