பொருளாதார சுரண்டலைப் பற்றி காந்திஜி

பொருளாதார சுரண்டலை எப்படி சமாளிப்பதென்ற கேள்விக்கு மகாத்மா காந்தி இன்று பதிலளித்ததாவது:-
பொருளாதார சுரண்டலைப் பற்றி காந்திஜி

பொருளாதார சுரண்டலை எப்படி சமாளிப்பதென்ற கேள்விக்கு மகாத்மா காந்தி இன்று பதிலளித்ததாவது:-
ஒவ்வொரு கிராமமும் தனது உபயோகத்திற்குத் தேவையான ஒவ்வொரு பண்டத்தையும் உற்பத்தி செய்தால், பொருளாதார சுரண்டல் எல்லாம் தானாகவே நின்றுவிடும். மற்ற நாடுகளைச் சுரண்டி சுபிட்சம் தேடுவதுமில்லாமல் போகும்.
வார்தாவிலுள்ள கோவிந்தராம் ஸாக்ஸிரியா கமெர்ஷியல் காலேஜ் தலைமை ஆசிரியர் ஸ்ரீ. எஸ்.என். அகர்வாலின் கேள்விக்கு மகாத்மா காந்தி சொன்ன பதில்:-
அன்னிய நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு ஏஜண்டுகளாக இருக்கும் கைத்தொழில் முதலாளிகள், தங்கள் செய்கை தவறு என்று உணர்ந்து, அதற்கு எதிராக நடக்கும் துரோகிகள் அல்ல. இதை நாம் உணர வேண்டும். அவர்கள் தங்கள் திட்டம் பாமர மக்களுக்கு சுபிட்சம் தருமென்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அவர்கள் தவறுதான். ஆனால் அவர்கள் தவறு என்று நிரூபித்துக்காட்ட வழி, பொறுமையாக ஆராய்ச்சி செய்து அந்த ஆராய்ச்சியை வெளியிடுவதும், முயற்சி செய்து காட்டி அந்த முயற்சிக்கு ஜனங்கள் இணங்கி நடந்து சுபிட்சமடைகின்றனரென்று காட்டுவதுமே தான்.
அதைச் சாதிக்க, சிரத்தையுடன் சிந்தனை செய்ய வேண்டுவதும் பிரயாசையுடன் ஆராய்ச்சி செய்ய வேண்டுவதும் ஜனங்களிடை வேலை செய்ய வேண்டுவதும் அவசியமாகும். ஜனங்கள் தங்கள் தேவைக்குரிய பண்டங்களை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தனது உபயோகத்திற்குரிய ஒவ்வொன்றையும் உற்பத்தி செய்யுமானால் அந்த நிலைமை எப்படியிருக்குமென்று நீங்கள் உங்கள் மனக்கண்ணால் சித்தரித்துப் பாருங்கள். அவ்வித நிலைமையில் கிராமங்களிலிருந்து அவற்றின் தேவை போக, மிச்சம் இந்திய நகரங்களுக்கு கிடைக்கும். இதனால் எல்லாவித சுரண்டலும் தானாகவே நின்றுவிடும். வெளி உலகை சுரண்டுவதின்றியே சுபிட்மும் சாதகமாகிவிடும்.

தினமணி (03-06-1945)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com